சாதனை வெற்றி வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றி – மு.க.ஸ்டாலின் அறிக்கை

MK Stalin

மு.க.ஸ்டாலின் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இன்றைய நாள் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக சார்பில் வேட்பாளராக நின்று அன்னியூர் சிவா தற்போது 50,000வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

இதனால், திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானதென்ற கூறலாம், இதன் காரணமாக அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினார். அதனை தொடர்ந்து தற்போது அவர் எக்ஸ் தளத்தில் 4 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது! விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கும் மற்றும்  உழைத்த அனைவருக்கும் நன்றி. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி பெற்றது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக ஆற்றமிகு உடன்பிறப்பு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தோம். நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது.  அதே போல தோற்கப்போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நேரம் காலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல்மிகு வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க பொறுப்பேற்றுக் கொண்ட கழக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் க.பொன்முடி கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் பெருமக்கள் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் களம் கண்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் என பலரும் களப்பணி ஆற்றினார்கள். திமுக கழக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review