5-வது சுற்று முடிவிலும் முன்னிலை வகிக்கும் திமுக ..! பின்னடைவை சந்திக்கும் பாமக..!

இடைத்தேர்தல் முடிவுகள்: நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி நடைபெற்று வருகின்றது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.
இதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது அதில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா தான் முன்னிலை பெற்று வந்தார். அடுத்ததாக வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணப்படுகையிலும் முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று என தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார்.
தற்போது, 5 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 31,151 வாக்குகள் பெற்று சுமார் 19,600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி 11,483 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 2,275 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் 20 சுற்று வாக்கு எண்ணிக்கையில் இன்னும் 15 சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025