“தமிழகத்தில் பூஸ் அடித்த பாரத் பந்த்”

Default Image

இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.

அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.அதேபோல்  சிஐடியு சங்க ஓருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், பள்ளிகளுக்கு செல்லும் ஆட்டோக்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடாது என தெரிவித்தார்.மேலும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி, இன்று  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 90 % மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பில்லை. சென்னை , சேலம் , தூத்துக்குடி , திருச்சி உட்பட நகரங்களில் பேருந்தும் , ஆட்டோவும் ஓடியது.கடைகளும் பெரும்பகுதி திறந்து இருந்தது.மக்களின் கூட்டம் வழக்கம் போல் இருந்தது.அதே போல இரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் இருந்தது.

ஆனாலும் பாதுகாப்பு நலன் கருதி போக்குவரத்து நிறுத்தம் , பேருந்து நிலையம் , முக்கிய கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்புக்கு போடபட்டுள்ளது.தொடர்ந்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்..

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்