வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான வீட்டு மருந்துகளை தெரிஞ்சுக்கோங்க..!

white discharge

White discharge-வெள்ளைப் படுதலுக்காக நம் முன்னோர்கள் கூறிய வீட்டு மருத்துவங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.

வெள்ளைப்படுதல் ஏற்பட காரணங்கள்;

உடல் சூடு, கழிப்பறை சுத்தம் இல்லாமல் இருப்பது, உள் ஆடைகள் சுத்தம் இல்லாமல் அணிவது ,தவறான உணவு பழக்க வழக்கம் ,மனக்கவலை ,தூக்கமின்மை ,சுகாதாரம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றால் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.

இந்த வெள்ளைப்படுதல் 13 இல் இருந்து 45 வயது  இருக்கும் பெண்களுக்கு ஏற்படும். இதனால் முதுகு வலி ,உடல் வலி, ரத்த சோகை , எவ்வளவு அதிகமாக உணவு எடுத்துக் கொண்டாலும் ஒல்லியாகவே இருப்பது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாமல் இதை ஆரம்ப காலத்திலேயே தடுக்காவிட்டால் பிற்காலத்தில் கருத்தரிப்பதில் தாமதம் அல்லது கருத்தரிக்க முடியாமல் போவது போன்ற கருப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

வெள்ளைப்படுதலுக்கான வீட்டு மருத்துவம்;

சோற்றுக் கற்றாழையில் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து ஆறு முறைக்கு மேல் நீரில் கழுவி அதை மோரில் கலந்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளவும்.

இளநீரில் ஒரிஜினல் சந்தனத்தை உரசி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதை இளநீரில் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு வெறும்  வயிற்றில் குடித்து வரவும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வரலாம்.

மேலும் உளுந்து 100 கிராம் ,பார்லி 100 கிராம் இவற்றை ஊற வைத்து சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஞ்சி ஆகவும் செய்து குடித்து வரவும்.

அது மட்டுமல்லாமல் சுக்கான் கீரையை தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தாலும் வெள்ளைப்படுதல் நின்று  விடும். சப்ஜா  விதைகளை ஊறவைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம். ஜவ்வரிசியை பாலில் வேக வைத்து குடித்து வரலாம்.

மேலும் உணவுக்குப் பின் மதிய வேலைகளில் மோர்  அருந்துவது நல்லது .அது மட்டுமல்லாமல் மாதத்திற்கு ஒருமுறை கைகளில் மருதாணி வைத்துக் கொள்வது, உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சி பெறக்கூடிய உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வது, வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் வைத்து குளிப்பது போன்றவற்றையும் செய்து வர வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்;

கத்தரிக்காய் வெள்ளைப்படுதல் இருக்கும்போது எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் மசாலா உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

பொதுவாகவே ஒல்லியாக இருப்பவர்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும். இந்தப் பிரச்சனை இருந்தாலும் ஒல்லியாகவே இருப்பார்கள் .அதனால் இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் இந்த எளிமையான மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தி பலனடையுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்