அம்பானி வீட்டு திருமணம்: ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம்.. IT நிறுவனங்கள் அறிவிப்பு.!

IT companies - Ambani Home Marriage

அம்பானி வீட்டு திருமணம்: ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் (பிகேசி) உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இதனால், மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) உள்ள பல நிறுவனங்கள், திருமணத்திற்காக அப்பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரான திருமண இடத்திற்கு அருகிலுள்ள சாலைகள் ஜூலை 12 முதல் ஜூலை 15 வரை மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை திருமணத்திற்கு வரும் விருத்தினர்களின் வாகனங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.

இந்நிலையில், ஜூலை 12 முதல் ஜூலை 15 வரை நகரத்தி மும்பையின் மிகப்பெரிய IT பூங்காக்களில் ஒன்றான பாண்ட்ரா குர்லா வளாகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி (Work From Home) கேட்டு கொண்டுள்ளன.

அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள், பிரபலங்கள் வரவுள்ளதை ஒட்டி, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து.

திருமண செலவு :

ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிர்க்கும் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு மொத்தமாக ரூ. 4,000 கோடி முதல் 5,000 கோடி வரை ($0.6 பில்லியன்) செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்