பாதுகாப்பு காவலர் கன்னத்தில் ‘பளார்’ ..! ஸ்பைஸ்ஜெட் நிறுவன பெண் ஊழியர் கைது!

Jaipur Airport

ஜெய்ப்பூர் : ஜெய்பூரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனவத்தில் வேலை செய்து வரும் பெண் ஊழியர் கன்னத்தில் அறைந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ஸ்பைஸ்ஜெட் (Spicejet) விமான நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) உதவி காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்துள்ளார். இவரை அறைந்த இந்த காட்சியானது அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகி இருந்தது.

மேலும், அரசாங்க அதிகாரியை தாக்கியதான்காரணமாக பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தற்போது, சிசிடிவியில் பதிவான அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ‘அந்த காவலரும், அந்த பெண்ணும் ஏதோ பேசி கொண்டிருப்பார்கள். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த அந்த பெண் ஊழியர், காவல் அதிகாரியின் கன்னத்தில் அரைந்துருப்பார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தரப்பில் கூறுவது என்னவென்றால், “இன்று, ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் ஊழியருக்கும் மற்றும் சிஐஎஸ்எஃப் பணியாளருக்கும் இடையே ஒரு கசப்பான சம்பவம் நடந்தது. அதில் எங்கள் ஊழியர் சிஐஎஸ்எஃப் பணியாளரால், பணி நேரம் முடிந்ததும் அவரை வந்து வீட்டில் சந்திக்கச் சொல்லியிருக்கிறார். மேலும், தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளுக்கும் எங்கள் ஊழியர் உட்படுத்தப்பட்டுள்ளார்.

நங்கள் எங்கள் ஊழியருக்கு ஆதரவாக இருக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் பெண் ஊழியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான இந்த கடுமையான வழக்கில் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி,  உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம்”, என்று கூறி இருக்கின்றனர். மேலும், இந்த குற்றசாட்டை மறுத்து சிஐஎஸ்எஃப் அதிகாரி தரப்பில் கூறுகையில்,  “அதிகாலை ஒரு 4 மணியளவில் ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியரான அனுராதா ராணி மற்ற ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைய விடாமல் எங்கள் அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

வாசல் வழியாக உள்ளே செல்ல தேவையான அங்கீகாரம் இல்லாததன் காரணமாக, உதவி காவல் ஆய்வாளர் கிரிராஜ் பிரசாத் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், அருகில் இருக்கும் விமானக் குழுவினருக்கான பிரத்யேக ஸ்கிரீனிங்கிற்குச் செல்லும்படி வலியுறுத்தியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, அனுராதா ராணி காவல் அதிகாரியான கிரிராஜ் பிரசாத்தை அறைந்துள்ளார்”, என கூறப்பட்டுள்ளது.

தற்போது, இந்த சம்பவத்தில் ஸ்பைஸ்ஜெட் ஊழியரான அனுராதா ராணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் இது தொடர்பான அந்த சிசிடிவியில் பதிவான அந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்