ஜாபர் சாதிக் ஜாமீன் ஓகே.! வெளியில் வர முடியாத புதிய சிக்கல்.!

jaffer Sadiq

டெல்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருள்கள் கடத்தியாக சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர். கடத்தப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் என்று அப்போது கூறப்பட்டது. ஜாபர் சாதிக் தமிழகத்தில் பிரதான கட்சியில் முன்னாள் பிரமுகராகவும் இருந்துள்ளார். பின்னர் ஜாபர் சாதிக் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 28இல் அமலாக்கத்துறையும் கைது செய்திருந்தது. இதற்கிடையில், டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுதிர் குமார் சிரோஹி ஜாபர் சாதிக்கிற்கு போதை பொருள் கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்…

  • 1 லட்சம் ரூபாய் பிணை தொகை செலுத்த வேண்டும்.
  • மாதத்தின் முதல் திங்கள் அன்று மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.
  • ஜாபர் சாதி தனது பாஸ்போர்ட்டை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  • செல்போன் எண்ணை விசாரணை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். எந்த நேரமும் தொடர்பு கொள்ள எதுவாக செல்போன் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
  • வீடு முகவரி மாறினால் அதனை விசாரணை அதிகாரிகளிடம் கூற வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இருந்தாலும், ஜாபர் சாதிக் தற்போது சிறையில் இருந்து வெளியில் வரமுடியாத சூழல் உள்ளது. ஏன்னென்றால், அமலாக்கத்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திகார் சிறையில் அவர் விசாரணையில் இருப்பதால் ஜாமீனில் வெளியில் வர முடியாத சூழல் உள்ளது. அமலாக்கத்துறை கைதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்