சட்டுனு ஒரு குழம்பு செய்யணுமா? அப்போ மோர் குழம்பு தான் பெஸ்ட்..
மோர் குழம்பு –எளிமையான முறையில் மோர் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்;
- வெண்டைக்காய் =200 கிராம்
- தயிர்= 300 கிராம்
- தேங்காய் =கால் கப்
- இஞ்சி= ஒரு துண்டு
- பூண்டு =நான்கு பள்ளு
- கடலை மாவு= ஒரு ஸ்பூன்
- சின்ன வெங்காயம்= ஒரு கைப்பிடி அளவு
- பச்சை மிளகாய்= இரண்டு
- காய்ந்த மிளகாய் =இரண்டு
- மஞ்சள் தூள்= அரை ஸ்பூன்
- சீரகத்தூள்= ஒரு ஸ்பூன்
- கடுகு= அரை ஸ்பூன்
- வெந்தயம் =கால் ஸ்பூன்
- எண்ணெய் =நான்கு ஸ்பூன்
செய்முறை;
வெண்டைக்காயை கழுவி ஈரம் இல்லாமல் சுத்தம் செய்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் ,இஞ்சி ,பூண்டு ,பச்சை மிளகாய் ,மஞ்சள் தூள், சீரகத்தூள், கடலை மாவு சேர்த்து மைய அரைத்து வெண்டைக்காயில் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து கொள்ளுங்கள் .
இப்போது தயிரை மிக்ஸியில் லேசாக அடித்து சேர்த்துக் கொள்ளவும். இவை நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கி விடவும். இப்போது மற்றொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கி வைத்துள்ள மோர் குழம்பில் சேர்க்க வேண்டும். இப்போது மோர் குழம்பு தயார்.