சிறகடிக்க ஆசை சீரியல்- வசமாக மாட்டிய மனோஜ்.. ரோகிணி எடுக்கும் முடிவு என்ன ?.

siragadikka asai 11

சிறகடிக்க ஆசை இன்று – சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஜூலை 11] எபிசோடு இங்கே காணலாம்.

ஸ்ருதி மனோஜ்க்கு கால் பண்ணி வாய்ஸ் மாத்தி பேசுறாங்க.. ஆனா மனோஜ் உஷார் ஆயிட்டு நான் எந்த ஜுவல்சும் வாங்கல இனிமே இது மாதிரி கால் பண்ணாதீங்க.. அப்புறம் சைபர் க்ரைம்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் அப்படின்னு காலை கட் பண்ணிடுறார். இப்போ ரவி சொல்றாரு எனக்கு என்னமோ அவன் பண்ணலைன்னு தாண்டா தோணுது .

முத்து  சொல்லுறாரு இல்லடா அவன் தான் பண்ணி இருப்பான் எனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும் இதுல இருந்து தப்பிக்கிறதுக்காக அப்படி சொல்லி இருக்கிறான் . இப்போ மனோஜ் விஜயா கிட்ட நடந்ததை சொல்றாரு விஜயா சொல்றாங்க இது கண்டிப்பா முத்துவோட வேலையா தான் இருக்கும் நீ சீக்கிரமா தங்க நகையை மாற்றி வைக்கிற வழிய பாரு அப்படிங்கிறாங்க. அம்மா எனக்கு ரோகினிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தான் பயமா இருக்கு அப்படின்னு சொல்றாரு.

bharvathi

மீனாவும் முத்துவும் பார்வதி வீட்டுக்கு போறாங்க ..கண்டிப்பா பார்வதி அத்தைக்கு இத பத்தி நல்லா தெரிஞ்சிருக்கும் நாம போலான்னு கிளம்புறாங்க ..பார்வதி அவங்கள  பாத்துட்டு ரொம்ப சந்தோச படுறாங்க .இப்போ முத்து சொல்றாரு பழக்கடை வியாபாரியுடன் சவாரிக்கு போயிருந்தேன் அத்தை நிறைய பழம்  கொடுத்து இருந்தாங்க அதான் உங்களுக்கு கொஞ்சம் குடுத்துட்டு போலாம்னு வந்தோம்னு சொல்றாரு.

அப்படியே மெதுவா நகை  விஷயத்தை பேச ஆரம்பிக்கிறாங்க மீனா சொல்றாங்க பாட்டி பிறந்தநாளுக்கு நாங்க செயின் எடுத்து கொடுக்கலாம்னு நினைச்சேன் என்னோட நகையை வைத்து அப்படின்னு சொல்லவும் உடனே பார்வதி அதுதான் கவரிங் நகை ஆச்சு அப்படின்னு உளர்றாங்க .இதைக்கேட்ட முத்து இது எப்படி உங்களுக்கு தெரியும்னு  கேட்க  பார்வதி சொல்றாங்க விஜயா தான் சொன்னா அப்படின்னு.

இப்ப மறுபடியும் முத்து அத்தை எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்லி ஐஸ் வைக்க ஆரம்பித்து அந்த நகையை பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்கன்னு கேக்குறாரு.   பார்வதியும் அந்த நகையை மனோஜும் விஜயாவும் தான் அப்படின்னு சொல்லும்போது பார்வதி அப்படின்னு விஜயா கத்துறாங்க ..பார்வதி அதோட நிறுத்திட்டு வா  விஜயானு கூப்பிடுறாங்க.

vijaya (1)

இப்ப விஜயா முத்து மீனாவை பார்த்து இங்க என்ன பண்றீங்க அப்படின்னு கேக்குறாங்க.. பார்வதி ஆன்ட்டிக்கு பழம்  வாங்கிட்டு வந்தோம் அதான் கொடுத்துட்டு போலாம்னு வந்தோம்னு மீனா சொல்றாங்க. இதைக் கேட்ட விஜயா என்ன இது புதுசா இருக்கு . அதுக்கு முத்து சொல்றாரு  வீட்ல நடக்கிற எல்லாமே புதுசா தான் இருக்கு அப்படின்னு சொல்றாரு. இரண்டு பேருமே கிளம்பிறாங்க  . நல்ல வேலை விஜயா நீ வந்தா இல்லாட்டி நான் நல்லா உளறி இருப்பேன் அப்படின்னு பார்வதி சொல்றாங்க.

இப்போ முத்துக்கு செல்வம் கால் பண்றாரு நம்ம கார் செட்டுக்கு பக்கத்துல கம்மி விலையில் பொருள் எல்லாம் போட்டு இருக்காங்க முத்து நான் பிரிட்ஜ் வாங்கணும் நீ கொஞ்சம் வரியா அப்படின்னு கேக்குறாங்க. ஆனா முத்து இத கண்டுபிடிக்க முடியலைன்னு ரொம்ப கவலையில் இருக்கிறார். மீனா  போன வாங்கி அண்ணே நீங்க வெயிட் பண்ணுங்க அவர் வந்துருவாருன்னு  சொல்றாங்க.

முத்து கிட்ட மீனா சொல்றாங்க பொய்யிங்கிறது மேகம் மாதிரிங்க அது ஆகாயத்தை கொஞ்ச நேரம் மறைச்சிருக்கும்  அப்புறம் கலைஞ்சு போயிடும் அது மாதிரி தான் உண்மையும் ஒரு நாள் வெளியில வரும் அப்படின்னு சொல்லவும்.. முத்து என்ன வசனம் எல்லாம் பேசுற அப்படின்னு கேக்குறாங்க. எங்க அப்பா சொல்லி இருக்காங்க. முத்துவும் சரின்னு கிளம்புறாரு இதோட இன்னைக்கு ஓட எபிசோட் முடிந்தது.

Rohini

நாளைக்கு  ப்ரோமோல மனோஜ் ஏமாத்தினவங்க தான் கம்மி விலையில் பொருள் போட்டு இருக்காங்க இத வாங்க முத்துவும் செல்வம் போயிருக்கிறார்கள். இந்த விஷயம் தெரிஞ்சு போலீஸ் அங்க இருந்தவங்க எல்லாத்தையும் அரெஸ்ட் பண்ணிடுராங்க . இப்போ ஸ்டேஷன்ல மனோஜ் இருக்கிறார் ஏமாத்திட்டு போன பொருள் லிஸ்ட் எல்லாம் போலீஸ் கிட்ட சொல்றாரு அப்போ போலீஸ் சொல்றாங்க 3 லட்சத்துக்கான பொருளை தானே சொன்னீங்க இப்ப என்ன நாலு லட்சம்னு சொல்றீங்க அப்படின்னு கேக்குறாங்க.

அதுக்கு மனோஜ் சொல்றாரு இல்ல சார் அதுல ஒரு லட்சம் வந்து வீட்டுக்கு  லாபம் வந்துச்சுன்னு குடுத்துட்டேன் எப்படியோ சமாளிச்சு கொடுத்து இருக்கிறேன் அதனாலதான் சார் நாலு லட்சம் அப்படின்னு சொல்லுறாரு  இதை முத்து வீடியோ எடுத்துட்டு இருக்காரு. உண்மை என்னன்னு விசாரிச்சு போலீஸ் முத்துவை செல்வத்தையும் விட்டுறாங்க .முத்து வீட்ல போயி அந்த வீடியோ  போட்டு காட்டுகிறார். ரோகிணி ஷாக் ஆகி  மனோஜ பார்க்கிறாங்க.. நாளைக்காண   சுவாரசியமான எபிசோடை காண காத்திருங்கள்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi