நீர்நிலை மேம்பாட்டு முகமையில் வேலைவாய்ப்பு.. ரூ.13,000 சம்பளம்! உடனே விண்ணப்பியுங்கள்…
நீர்நிலை மேம்பாட்டு முகமை : தூத்துக்குடி மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையில் காலியாக நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால், அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 18.07.2024. |
நேரடியாக கலந்து கொள்ள நேர்காணல் தேதி | 19.07.2024 காலை 11.00 மணிக்கு. |
காலிப்பணியிடங்களின் பெயர் :
நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc. (Agri), அல்லது Diploma in Agri இளங்கலை வேளாண்மை பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அனுபவம் :
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம் :
நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர் பதவிக்கு ரூ.13,000/- சம்பளமாக வழங்கப்படும்.
முகவரி :
திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்
தூத்துக்குடி – 628101
குறிப்பு :
- இவ்விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 18.07.2024 வரை பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் அனைத்து விண்ணப்பதாரர்களும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான அழைப்பாணை தனியாக வழங்கப்பட மாட்டாது.
- மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் நேரிலோ (அ) தபால் மூலமாகவோ 18.07.24 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.