‘தங்க மோதிரம்லாம் தேவை இல்லை ..இனி இது போதும்’ ..! சாம்சங்கின் ‘கேலக்ஸி ரிங்’ அம்சங்கள் ..!
கேலக்ஸி ரிங் : சாம்சங் நிறுவனம் புதிதாக ஒரு மோதிரத்தை வெளியிட்டுள்ளது, அதனது அம்சங்கள் மற்றும் விளைவிவரங்கள் பற்றி பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனம் புதிதாக பல அம்சங்கள் நிறைந்த வாட்ச், மொபைல் போன்கள், இதர கேட்ஜட்ஸ்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். அதன்படி நேற்றைய நாளில் சாம்சங் புதிதாக இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் எனப்படும் ஒரு புதிய மோதிரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் சாதாரணமாக அல்லாமல் நம்முடைய உடலின் ஆரோக்யத்தை கண்காணிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு :
- சாம்சங் வெளியிட்டுள்ள இந்த மோதிரமானது டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நீரில் கூட எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மோதிரம் வெறும் 2.3-3.0 கிராம் அளவிற்கு தான் உருவாக்கி இருக்கிறார்கள்.
- இதனால் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
அம்சங்கள் :
- சாம்சங்கின் ஹெல்த் ஆப்ஸுடன் (Health Option) ஆப் மூலம் இந்த மோதிரத்தை இணைப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தினமும் கவனித்துக் கொள்ளலாம். அதில் முக்கியமாக இதயத் துடிப்பை சரியாக இருக்கிறதா?, நன்றாக தூங்குகிறோமா?, பிபி (BP) போன்றவற்றை சரிபார்க்க வேண்டும் என்றால் அதை இப்போது இந்த சாம்சங் மோதிரத்தின் மூலம் செய்யலாம்.
- மேலும் இதில் உடல் வெப்பநிலை சென்சாரும் உள்ளதால் நம் உடல் சூடானால் கூட இது நமக்கு தெரிவித்துவிடும் அந்த அளவிற்கு இதனது அம்சங்களை வடிவமைத்துள்ளது சாம்சங் நிறுவனம்.
- சாம்சங் ரிங்கில் மேலும் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் இதில் AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது தான்.
- இந்த AI மூலமாக தான் உடலை நம்மால் கண்காணித்து கொள்ள முடிகிறது.
- இந்த ரிங்கால் சாம்சங் கேலக்ஸி போனையும் கட்டுப்படுத்தவும் முடிகிறது.
- மேலும், இந்த ரிங் தொலைந்து விட்டாலோ அல்லது கண்ணுக்கு தென்படாமல் இருந்தாலோ ‘ஃபைன்ட் மை ரிங்’ எனும் ஆப்ஷன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
- இதில் இன்னோரு அம்சம் என்னவென்றால் ஒரு முறை இதில் சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு அது நீடிக்கும் திறனுடன் உருவாக்கி உள்ளனர்.
விலை விவரம் :
- அற்புதமாக சாம்சங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ரிங்கானது ரூ.5000/- முதல் சாம்சங் ஷோரூம் மற்றும் இதர சந்தைகளில் கிடைக்கிறது.
- அதே நேரம் அதனது அம்சங்களுக்கு ஏற்ப விலை உயர்வாகவும் கிடைக்கிறது.