பேய் இருக்கா இல்லையா? மாணவர்கள் பயத்தை போக்க ஆசிரியர் செய்த செயல்! வைரலாகும் வீடியோ ..!
தெலுங்கானா : பொதுவாகவே சிறிய வயதுடையவர்களுக்கு பேய் என்ற பெயரை கேட்டாலே பயந்துவிடுவார்கள். பின் வளர வளர அப்படி எல்லாம் இல்லை என்பது போல சொல்லி கொடுத்தால் மட்டும் தான் அவர்கள் அந்த விஷயத்திற்கு பயப்படாமல் இருப்பார்கள். அப்படி தான் தெலுங்கானாவில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பேய் இல்லை என்பதை எடுத்து உரைத்து கூறி தைரியம் வர வைக்கும் வகையில் ஒரு செய்யலை செய்து இருக்கிறார்.
ஆதிலாபாத் ஜைனாத் மண்டலில் உள்ள ஆனந்த்பூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரம் விழுந்ததால், காலி அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்ட மாணவர்களிடையே பேய் இருப்பதாக பீதி ஏற்பட்டது.அந்த அறைக்குள் பேய் இருக்கிறது நாங்கள் வரமாட்டோம் என மாணவர்கள் பலரும் பயத்தில் இருந்துகொண்டு வர மறுத்துள்ளனர்.
இதனை அறிந்துகொண்ட அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் பேய் எல்லாம் இல்லை என்று கூறிவிட்டு நான் இன்று இரவு முழுவதும் அந்த அறையில் தூங்குகிறேன் அப்போது உங்களுக்கு பேய் பயம் போகுமா? என்று கேட்டுவிட்டு ஒரு நாள் இரவு முழுவதும் அந்த ஆசிரியர் அந்த அறையில் தூங்கி எழுந்தார். காலையில் பள்ளிக்கு சென்று பார்த்தபோது ஆசிரியர் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அறையில் பேய் எல்லாம் இல்லை என்று கூறி ஆசிரியரை எழுப்பினார்கள். பேய் இல்லை என்பதை புரிய வைத்து அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க ஆசிரியர் செய்த இந்த செயலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆசிரியரை பாராட்டி வருகிறார்கள்.