தமிழகத்தில் வர போகும் 5 மருத்துவக்கல்லூரிகள் ..! எங்கேல்லாம் தெரியுமா?

NMC

என்எம்சி: இந்தியா முழுவதும் 113 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கவுள்ளதாக என்எம்சி அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் மட்டும் 5 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கவுள்ளனர்.

இந்தியாவில் நாம் புதிதாக மருத்துவக்கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்றால் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். தற்போது இதற்கான அனுமதியை மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கி இருக்கிறது. என்எம்சி அனுமதி வழங்காத பட்சத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்க முடியாது. அது மட்டுமில்லாமல் கல்லூரிகளில் மாணவர்களையும் சேர்க்க முடியாது.

அதன்படி தமிழகத்தில் புதிய 5 மருத்துவக்கல்லூரிகள் உள்பட இந்தியா முழுவதும் புதியதாக 113 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் (NMC-என்எம்சி) தற்போது அனுமதி வழங்கி உள்ளது. மேலும், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் மட்டும் 22 மருத்துவக்கல்லூரிகள் நிறுவ உள்ளனர். அதே போல தமிழகத்தில் எங்கெங்கு இந்த 5 தனியார் மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளது என்பதை பார்க்கலாம்.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா ஓங்கூர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புத்தூர், சென்னையில் உள்ள அவனம்பட்டு, மற்றும் கன்னியாகுமரி என 5 புதிய தனியார் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியையும் தற்போது என்எம்சி வழங்கியுள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் மட்டும் 22 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் 14 மருத்துவக்கல்லூரிகள், ராஜஸ்தானில் 12 மருத்துவக்கல்லூரிகள், தெலுங்கானாவில் 11 மருத்துவக்கல்லூரிகள், மேற்கு வங்கத்தில் 8 மருத்துவக்கல்லூரிகள், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தலா 7 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் 5 மருத்துவக்கல்லூரிகளும், உத்தரகாண்டில் 3 மருத்துவக்கல்லூரிகள், கேரளா, ஒடிசா, குஜராத் மாநிலங்களில் தலா 2 மருத்துவக்கல்லூரிகள் , இறுதியாக ஹரியானா, டெல்லி, அசாம், பஞ்சாப், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 மருத்துவக் கல்லூரி என மொத்தம் 113 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்