பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! முதலிடம் பிடித்த செங்கல்பட்டு மாணவி!

Engineering Admission

சென்னை : 2024-25ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டு உள்ளார்.

பொறியியல் படிக்க சேர விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ஆம் தேதி தொடங்கி, கடந்த (ஜூன்) 6-ஆம் தேதி நிறைவு பெற்றது. பிறகு விண்ணப்பம் செய்ய அவகாசம் கேட்டு கோரிக்கள் வந்த நிலையில்,   கடந்த ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் விண்ணப்பப் செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பின், விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், மொத்தமாக 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டு இருக்கிறார். அதில்,  பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி முதலிடம், நெல்லையைச் சேர்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடம், நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலில் சேலம் மாணவி ரவணி முதலிடம். கோவை மாணவி கிருஷ்ணா அனூப் இரண்டாம் இடமும், வேலூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் தமிழக அரசின் இணையதளமான  tneaonline.org இணைய தளத்தில் சென்று பார்க்கலாம்.  மேலும், பொறியியல் கலந்தாய்வு வரும் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்