துவண்டு போன அஜித்., தன்னம்பிக்கை கொடுத்த ரஜினி.! பரிசாக கிடைத்த மெகா ஹிட்.!
அஜித்குமார் : ஆரம்ப காலகட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து 2000களில் பல தோல்வி படங்கள் கொடுத்து பிறகு தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வந்த சமயத்தில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் விஷ்ணுவரதன் இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ திரைப்படம் தான்.
ஜி, பரமசிவன், திருப்பதி, ஆழ்வார், கிரீடம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இடையில் வரலாறு படம் மட்டும் ஹிட் வரிசையில் இணைந்து இருந்தது. மீதி படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வந்த காரணத்தால் அஜித் அந்த சமயம் மிகவும் வேதனை அடைந்தாராம்.
அந்த சமயத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஒரு நிகழ்வில் சந்திக்கும் வாய்ப்பு அஜித்திற்கு கிடைத்துள்ளது.அப்போது அஜித்திடம் ரஜினி, படங்கள் எல்லாம் அடுத்ததாக எப்படி தேர்வு செய்து வைத்து இருக்கிறீர்கள் நன்றாக போகிறதா? என்பது போல கேட்டாராம். அப்போது சரியான கதைகளை தான் தேர்வு செய்து நடிக்கிறேன். ஆனால், படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறுவதில்லை. கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்பது போல கூறியுள்ளார்.
அப்போது தான் ரஜினிகாந்த் அஜித்திடம் உங்களுக்கு வில்லத்தனமான நடிப்பு நன்றாக வருகிறது. நீங்கள் என்னுடைய பில்லா படத்தினை ஏன் ரீமேக் செய்து அதில் நடிக்க கூடாது? கண்டிப்பாக நீங்கள் பில்லா படத்தின் ரீமேக்கில் நடியுங்கள் என்று ரஜினிகாந்த் கூறினாராம். ரஜினி சொன்ன அந்த வார்த்தையை சரியாக கவனித்துக்கொண்டு அஜித் அதன்பிறகு தான் பில்லா படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவெடுத்தாராம்.
பிறகு, இயக்குனர் விஷ்ணுவரதனை அழைத்த அஜித் பில்லா படத்தின் ரீமேக் பற்றி பேசிவிட்டு படத்தினை இயக்க சொன்னாராம். பிறகு படத்தினை அவர் அருமையாக இயக்கியும் கொடுக்க இன்றுவரை அஜித் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அந்த படம் இருக்கிறது. ரஜினிகாந்த் மட்டும் அன்று பில்லா படத்தின் ரீமேக்கில் நடிங்கள் என்று கூறவில்லை என்றால் அஜித் நடித்திருக்கவே மாட்டார்.
முன்னதாக, பில்லா படத்தில் நடித்த காரணம் பற்றி பேட்டியில் பேசிய அஜித்குமார் பில்லா படம் செய்ய காரணமே ரஜினிகாந்த் தான். அவருடைய வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது அந்த படம் தான். எனவே, நான் ரஜினியின் தீவிர ரசிகன் அவருக்காக தான் பில்லா படத்தில் நடிக்க நான் சம்மதம் தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.