அமில மழை என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது? முழு விவரம் இதோ ..!
அமில மழை : நம் நாட்டில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து கொண்டு வருகிறது, ஆனால் தூய மழை போல் பெய்யும் இந்த அமில மழை என்றால் என்ன ?, அது அப்படி ஏற்படுகிறது ? என்ற விவரங்களை இதில் பார்க்கலாம்.
அமில மழை என்றால் என்ன ?
- அமில மழை என்றால் வேறொன்றும் இல்லை, நமது வளிமண்டலத்தில் உள்ள காற்றை மாசுபடுத்த கூடிய முக்கிய கூறுகளான கார்பன்டை-ஆக்சைட் (Carbon-di-Oxide) மற்றும் நைட்ரஜன் ஆக்சைட் (Nitrogen Oxide) இரண்டும் காற்றில் கலப்பதால் ஏற்படும் விளைவு தான் இந்த அமில மழை, அதாவது ஆசிட் ரெயின் (Acid Rain).
- இதனை எப்படி அமில தன்மை கொண்ட மழை என்று கூறுகிறார்கள் என்றால், நாம் எந்த ஒரு திரவத்தையும் அதில் அமில தன்மை உள்ளதா என்று பார்ப்பதற்கு pH அளவு எடுத்து பாப்போம் அதில் pH அளவு 7 க்கும் கம்மியாக இருந்தால் அது அமிலத்தன்மை உடையது என்று அர்த்தம். ஒரு வேளை 7 ஐ தாண்டி உள்ளது என்றால் கார தன்மை உடையதாகும்.
- நமக்கு சாதாரணமாக பெய்ய கூடிய மழையில் அமில தன்மை மிகவும் குறைவாகவே இருக்கும். அதவாது, நமக்கு பெய்யும் தூய்மையான மழையின் pH அளவு 5.6 ஆகும். அதனால் பெய்யும் தூய்மையான மழையில் சிறுது அளவு அமில தன்மை என்பது இருக்கும். அதற்கு காரணம் வளிமண்டலத்தில் அமிலம் என்பது கலந்திருக்கும்.
அமில மழை பெய்வதற்கான காரணம் :
- அமில மழை பெரிதும் பெய்வதற்கு காரணமாக அமைவது எரிமலை வெடிப்பு தான். எரிமலை வெடிப்பில் உண்டாகக்கூடிய சல்ஃப்யூரிக் அமிலம் தான். இந்த சல்ஃப்யூரிக் அமிலம் காற்றில் கலப்பதால் காற்று மாசுப்பட்டு இந்த அமில மழை என்பது பெய்கிறது. இந்த சல்ஃப்யூரிக் அமிலம் ஆக்ஸிஜன், நீர் மற்றும் பிற இரசாயனங்களுடன் வினைபுரிந்து நைட்ரஜன் ஆக்சைட் மற்றும் சல்பூரிக் அமிலங்களை உருவாக்குகின்றன அது மழையாக மாறி பெய்கிறது.
ஏற்படுத்தும் விளைவுகள் :
- அமில மழையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாவது, ஏறி மற்றும் குளங்கள் தான். இந்த அமில மழையால் பெரிதும் அந்த நீர்நிலைகள் பாதிப்படைகிறது. மேலும், இதன் விளைவாக அதில் வாழும் மீன்கள், புழுக்கள் என சிறிய சிறிய உயிரனங்கள் உட்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அவ்வுயிரினங்கள் பெரிதும் பாதிப்பாயாவிட்டாலும், சிறிது சிறிதாக பாதிப்புக்குள்ளாகும்.
- மேலும், அதில் பாதிக்கப்பட்ட மீன்கள் போன்றவற்றை மனிதர்கள் உட்கொள்வதால் மனிதர்களுக்கும் சிறு சிறு உடல்உபாதைகள் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். மேலும், புற்கள், செடிகள், தாவரங்கள் விளைகின்ற மண்ணில் கூட இப்படி அமில பெய்தால், அங்கு விளையும் புற்கள் முதல் தாவரங்கள் வரை அனைத்தும் பாதிப்படைய அதிக வைய்ப்புகள் உள்ளது. அதில் விளையும் காய்கறிகளிலும் அமில தன்மை இருக்க கூடும் என்றும் கூறுகின்றனர்.