ஹாஸ்டல் சட்னியில் நீச்சல் அடித்த எலி ..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ ..!
ஹைதராபாத் : ஹைதராபாத்தில் உள்ள சுல்தான்பூர் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மெஸ்ஸில் மாணவர்களுக்கான உணவு தயாரிக்கப்படும் பெரிய பாத்திரத்தில் சட்னி தயாரித்தபோது அதில் சிறிய எலி உயிருடன் ஓடிக்கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை வீடியோவாக பதிவு செய்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ஒரு பாதுகாப்பாக கூட உணவை உங்களால் தயார் செய்ய முடியாதா? என தங்களுடைய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
தகவல்களின்படி, விடுதி ஊழியர்கள் செவ்வாய்கிழமை காலை உணவாக கடலை சட்னியுடன் இட்லி சமைத்து கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் சட்னியை திறந்து வைத்து கொண்டு சென்ற நிலையில், உயிருள்ள எலி உள்ளே விழுந்தது தெரிய வந்துள்ளது. சட்டினி பாத்திரத்தை மாணவர்கள் கவனித்தபோது அதில் எதோ நீந்துவது போல தெரியவந்துள்ளது.
பிறகு, அதில் நீச்சல் போட்டு கொண்டு இருந்தது எலி என தெரியவந்தது. இதனை கவனித்த மாணவர்கள், உடனடியாக தங்களுடைய போன்களை எடுத்து வீடியோவை பதிவு செய்தார்கள். சாப்பிடும் உணவில் எலி கிடைத்ததை பார்த்த கல்லூரி மாணவர்கள் மிகவும் கோபத்தில் இருக்கும் நிலையில், அவர்களை சமாதானப்படுத்த விடுதி நிர்வாகம் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மாணவர்களும், பிஆர்எஸ்வி ஆர்வலர்களும் இந்தப் பிரச்னையில் போராட்டத்துக்குத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Rat in the “Chutney” in the JNTUH SULTANPUR.
What hygiene maintenance by the staff members is in a mess.@FoodCorporatio2 @examupdt @ABVPTelangana @NtvTeluguLive @hmtvnewslive @TV9Telugu @htTweets @KTRBRS @DamodarCilarapu @PawanKalyan @JanaSenaParty @Way2NewsTelugu pic.twitter.com/Es7bGLzRdP— @Lakshmi Kanth (@330Kanth41161) July 8, 2024