பட்டப்பகலில் உக்ரைன் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! 41 பேர் பலி…

hospital attacked Russian

ரஷ்யா தாக்குதல் : உக்ரைன் தலைநகர் கீவில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், 170-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 800 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சொல்லப்போனால், கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் பட்டப்பகலில் உக்ரைன் தலைவர் நகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்ளிட்ட 5 நகரங்களின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கீவ் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது, நடந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்ததுடன் 171பேர் படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் நடந்ததற்கு பிறகு, பயந்துபோன நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள தப்பிச் சென்றனர். மேலும் இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கண்ணை கலங்க வைக்கிறது.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமூக வலைத்தளங்களில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். “தலைநகர் கீவ், டினிப்ரோ, கிரிவி ரிஹ், உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மருத்துவமனை, அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்