உங்க வீட்ல பல்லி தொல்லை அதிகமா இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!
Lizard– பல்லியை வீட்டிலிருந்து முழுமையாக விரட்டி அடிக்க கூடிய டிப்ஸ்களை இங்கே காணலாம்.
நம்மில் பலருக்கும் பாம்பை விட பல்லிக்கு தான் அதிகம் பயம் இருக்கும். இதனால் சமைக்கும் உணவுகளில் விழுந்து பல விபரீதங்களை ஏற்படுத்திவிடும் . நம் வீட்டிற்கு அலையா விருந்தாளிகளாக வரக்கூடிய இந்தப் பல்லிகளை விரட்ட சுலபமான குறிப்புகள் உள்ளது.
பல்லியை விரட்டும் வீட்டு குறிப்புகள்;
- முட்டை ஓடுகளை பல்லிகள் அதிகம் உலாவும் இடத்தில் வைக்க வேண்டும். இந்த வாசனை பள்ளிக்கு பிடிக்காது.
- வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பல்லிகள் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும் .இந்த வெங்காயத்தில் உள்ள சல்பர் வாசனை பல்லிக்கு ஆகாது.
- வெங்காயம் மற்றும் பூண்டை சாறு எடுத்து பல்லிகள் அதிகம் இருக்கும் இடத்தில் தெளித்துவிட்டால் பல்லிகள் அண்டாது. மேலும் வெங்காயத்திற்கும் பூண்டுக்கும் வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியையும் விரட்டி அடிக்கும் தன்மை உள்ளது .
- மிளகுத்தூளை தண்ணீரில் கலந்து தெளித்து விடுவதன் மூலமும் பல்லியை விரட்டலாம். நாப்தலின் உருண்டைகளையும் ஆங்காங்கே மூலைகளில் வைக்கலாம் இதன் மூலம் பூச்சிகள் கரப்பான் பூச்சி, பல்லி போன்ற தொந்தரவு இருக்காது.
- காபித்தூள் மற்றும் மிளகாய்த்தூள் அல்லது மூக்குப்பொடி அல்லது மிளகுத்தூள் இதில் ஏதேனும் ஒன்றை காபித்தூளுடன் கலந்து உருண்டைகளாக பிடித்து மூளைகளில் வைத்து விட வேண்டும். இந்த காபித்தூள் மற்றும் மூக்கு பொடியின் வாசனை பல்லிகளை முழுவதுமாக விரட்டி விடும்.
- எலுமிச்சை சாறு மற்றும் அரை ஸ்பூன் வினிகர், யூகலிப்டஸ் ஆயில் 2 சொட்டு இவற்றை தண்ணீரில் கலந்து பல்லிகள் இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்துவிட்டால் பல்லிகள் ஓடிவிடும். மேலும் வீடு துடைக்கும் போதும் இவற்றை கலந்து துடைத்தால் எந்த ஒரு பூச்சி, பல்லிகள் தொந்தரவு இருக்காது.
வீடு மற்றும் சமையல் அறையை எப்போதுமே தூசி படியாமல் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கதவு மற்றும் சுவர்களின் விரிசல் இருந்தால் அதனையும் சரி செய்து வைத்துக் கொள்ள வேண்டும், இதன் மூலம் பல்லிகளை நிரந்தரமாக நம் வீட்டை விட்டு விரட்டியடிக்கலாம்.