உங்க குழந்தைங்க கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ இது மாதிரி செஞ்சு கொடுங்க.!
மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
- மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு
- உளுந்து= ஒரு ஸ்பூன்
- கடலைப்பருப்பு =ஒரு ஸ்பூன்
- மல்லி =ஒரு ஸ்பூன்
- மிளகு= அரை ஸ்பூன்
- சீரகம்= அரை ஸ்பூன்
- சின்ன வெங்காயம்= 10
- பூண்டு =10 பள்ளு
- வரமிளகாய்= ஐந்து
- புளி = எலுமிச்சை சைஸ்
- எண்ணெய் = நான்கு ஸ்பூன்
- தேங்காய்= ஒரு கப் அளவு
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்து கடலைப்பருப்பு, சீரகம், மிளகு, மல்லி ,வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் .பிறகு பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும் . பின் இரண்டு கைப்பிடி அளவு கீரையை சேர்த்து நன்கு வதக்கவும். கீரை வதங்கிய பிறகு தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறி ஆறவைத்து புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும் .
பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு சுத்து விட்டு எடுத்துக்கொள்ளவும். அப்போதுதான் கீரையின் நிறம் மாறாமல் இருக்கும். இதை சிறிதளவு எண்ணெய் மற்றும் கடுகு சேர்த்து தாளித்து ஊற்றி இறக்கினால் கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை சட்னி தயாராகிவிடும். இந்த முறையில் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.