நண்பனின் ரீல்ஸ்க்கு போஸ் கொடுத்த வாலிபர்…விபத்தில் பலியான பரிதாப சம்பவம்…வைரலாகும் வீடியோ!
மகாராஷ்டிரா : மாநிலத்தின் துலே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் ரீல்ஸ் செய்யும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின் ஒரு நிமிட நீளமான வீடியோவில், பைக்கில் இருவரும் ஹெல்மெட் இல்லாமல் – நெடுஞ்சாலையில் தங்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது பின்புறம் அமர்ந்து இருந்தவர் ரீல்ஸ் செய்ய நினைத்து போனை எடுத்து பைக்கில் செல்வதை படம் பிடிக்க தொடங்கினார்.
பதிவுசெய்துகொண்டிருக்கும்போது, பைக்கை ஒட்டி சென்று கொண்டிருந்த மற்றோருவர் கேமராவை பார்த்து சிரித்தார். கேமராவை பார்த்த அவர் சாலையை பார்க்க முடியமால் இடது புறம் இருந்த தடுப்பில் மோதியதாக தெரிகிறது. மோதலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் இருவரும் காற்றில் பறந்து சாலையில் விழுந்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது .
வீடியோவின் முடிவில், விபத்திற்குப் பிறகு கேமரா மேலே வானத்தை கேமரா இருப்பதும், காயமடைந்த நபர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் உதவி கேட்பதைக் கேட்கலாம். “எனக்கு உதவுங்கள், எனக்கு இரத்தம் வருகிறது, என்று காயமடைந்தவர் மராத்தி மொழியில் கூறினார். பிறகு அவருக்கு ஒருவர் உதவியும் செய்துள்ளார். தகவலின் படி, இருவரும் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
चलती बाइक पर रील बनाना दो युवकों को पड़ा महंगा..बाइक का हुआ एक्सीडेंट..बाइक चला रहे शख्स की हादसे में मौके पर ही मौत..जबकि रील बना रहा दूसरा शख्स गंभीर रुप से घायल..ये हादसा #Dhule–#Solapur हाईवे पर #Beed बाईपास पर हुआ..वीडियों शोशल मीडिया पर तेज़ी से हो रहा वायरल@indiatvnews pic.twitter.com/dG8mJm5Jbj
— Atul singh (@atuljmd123) July 6, 2024