ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் எப்போது.? அவரது உடல் எங்கு வைக்கப்பட உள்ளது.?

Bahujan Samaj State Leader K Armstrong

சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலானது சென்னை செம்பியத்தில் உள்ள தனியார் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

தேசியவாத கட்சிகளின் பிரதான ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் தொடர்பான உண்மை நிலவரங்கள் கண்டறியப்பட்டு வருகிறது.

நேற்று படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலானது, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. முன்னதாக திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர், பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திற்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு அரசியல் கட்சியினர் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனை அடுத்து பொதுமக்கள் பார்வைக்காக ஆம்ஸ்ட்ராங் உடல்  பொது இடத்தில் வைக்க அனுமதி கேட்கப்பட்டு இருந்தது.

அதன்படி, செம்பியம் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடுகள் அரசு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக மேற்கண்ட மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட உள்ளது.

இதனை அடுத்து நாளை பிற்பகல் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர், ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய அரசு அனுமதி கேட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்