முந்துங்கள் வருங்கால வங்கி ஊழியர்களே …! UCO வங்கியில் அப்ரண்டிஸ் வேலை ..!

UCO Bank Apprantice Jobs

UCO வங்கி : யுனைடெட் கமர்ஷியல் வங்கி லிமிடெட் (UCO) வங்கியில் அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 544 காலியிடங்களும், தமிழகத்தில் 20 காலியிடங்களை அறிவித்துள்ளனர். இந்த காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் தகுதி உடையவர்கள் இந்த அறிவிப்பை படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 02-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 16-07-2024

வயது வரம்பு :

  • குறைந்தபட்ச வயது வரம்பு –  20 வயது
  • அதிகபட்ச வயது வரம்பு – 28 வயது
  • அதாவது ஒரு விண்ணப்பதாரர் 02-07-1996க்கு முன்னும், 01-07-2004க்கு பிறகும் பிறந்திருக்க கூடாது (இரண்டு தேதிகளுக்கு நடுவில் எந்த ஆண்டிலும் பிறந்திருக்கலாம்)
  • விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.

கல்வி தகுதி : 

  • விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை :

  • தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • மேலும், தேர்வுக்கு தற்காலிகமாக தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர் வெளியீட்டை வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

காலியிட விவரங்கள் : 

  • தமிழகத்தில் மட்டும் இந்த அப்ரண்டிஸ் பணிக்காக 20 காலியிடங்கள் அறிவித்துள்ளனர்.
SC 3
OBC 5
EWS 2
UR 10

(SC – Scheduled Caste,  OBC – Other Backward Classes, EWS – Economically Weaker Section, UR – Unreserved)

  • அதன்படி தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

சம்பள விவரங்கள் : 

  • இந்த அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 வருட காலம் பயிற்சி முறையில் வேலை செய்யலாம். மேற்கொண்டு ஆர்வமும், விருப்பமும் உள்ள ஊழியர்களாக பணியமர்த்தப்படலாம்.
  • மாதாந்திர உதவித்தொகையாக (Stipend) ரூ.15,000/- (மானியத் தொகை உட்பட) பயிற்சியின் போது பயிற்சியாளருக்கு வழங்கப்படும்.
  • குறிப்பாக தொழிற்பயிற்சி பெறுபவர்கள் வேறு எந்த கொடுப்பனவுகளுக்கும் / பலன்களுக்கும் தகுதியற்றவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

  • விண்ணப்பதாரர் அதிகாரபூர்வமனா இந்த https://nats.education.gov.in இணையத்தளத்தில் பதிவுசெய்து தனது சுயவிவரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இதற்கு முன் லாக்-இன் செய்யவில்லை என்றால், பதிவுக்கு தேவையான ஆவணங்களின் பட்டியல் NATS போர்ட்டலில் “மாணவர் பதிவு” சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • பதிவு செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், தேவையான அனைத்து ஆவணங்களும் தயாராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • உழ்நுழைந்தவுடன் விண்ணப்பதாரர் அடிப்படைத் தகவல்கள், கல்வி விவரங்கள், தகவல் தொடர்பு விவரங்கள், பயிற்சி விவரங்கள், ஆகியவற்றை சரியாக நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேற்க்கொண்டு அறிவுறுத்தல், தகவல்கள் வேண்டுமென்றால் வழிகாட்டுதலுக்காக அதிகாரப்பூர்வ இணையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இந்த அப்ரண்டிஸ் வேலைக்கான முழு விவரங்களும் தெரிந்து கொள்ள இந்த PDF ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்