பிரான்ஸில் 1300 ஆண்டுகள் பழமையான மேஜிக் வாள் மாயம்.!

பிரான்ஸ் : தென்மேற்கு பிரான்சில் உள்ள ரோகமடோர் என்ற நகரத்தில் 1,300 ஆண்டுகளாக பாறையில் சிக்கியிருந்த ஒரு பழங்கால வாள் மர்மமான முறையில் காணாமல் போனதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அந்த வாள் காணாமல் போனதை அடுத்து, அதை யாரோ திருடி சென்றதாக நம்புகிறார்கள். இந்நிலையில், மேஜிக் வாள் தொலைந்து போனது குறித்து பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பிரெஞ்சு இலக்கியத்தில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான படைப்பு இதுவும் ஒன்று. தற்பொழுது காணாமல் போனது மர்மமாகவே உள்ளது. எட்டாம் நூற்றாண்டில் புனித ரோமானியப் பேரரசர் சார்லமேனுக்கு ஒரு தேவதை வாளைப் பரிசாக அளித்ததாக புராணக்கதைகள் கூறுகிறது.