டெல்லி வந்திறங்கிய இந்திய அணி…கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட ரோஹித் சர்மா!

T20WorldCup

டெல்லி : மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2024-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், கோப்பையுடன் இந்திய வீரர்கள் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். இன்று வியாழக்கிழமை (ஜூலை 4) காலை இந்திய கிரிக்கெட் டெல்லியில் தரையிறங்கியது.

இந்திய அணி வீரர்கள் அதிகாலை டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்திற்கு வந்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றுள்ள காரணத்தால் இந்திய வீரர்களை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். டெல்லியில் தரையிறங்கிய பிறகு, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து ரசிகர்களின் பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை கோப்பையை வைத்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார்.

பிறகு ரோஹித் சர்மா நடனமும் ஆடினார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வீரர்கள் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியாவில் செக்-இன் செய்து, அங்கு சிறிது நேரம் தங்கிய பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்கச் செல்வார்கள். இந்திய அணிக்காக பிரதமர் தனது அலுவலகத்தில் ஒரு சிறிய விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, மும்பை செல்லும் இந்திய வீரர்கள், அங்கு மரைன் டிரைவில் திறந்த பேருந்து அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.

மேலும், இன்று மாலை 5 மணி அளவில் இந்தியா அணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரமாண்ட வரவேற்புடன் பாராட்டு விழா நடைபெற உள்ளது என தகவல்கள் வந்தது. அதனை தற்போது பிசிசிஐயின் செயலாளரான ஜெய்ஷா க்ஸ் தளத்தில் வெளியிட்ட ட்வீட் மூலம் உறுதி செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning