ரயில் இன்ஜினில் தொங்கி கொண்டு வந்த முதியவரின் சடலம்.! அதிர்ச்சி வீடியோ…
தெலுங்கானா : காட்கேசரின் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரயிலின் என்ஜின் முன், முதியவரின் உடல் பிணமாக தொங்கியபடி உள்ளது. காந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
உயிரிழந்தவர் சுமார் 65-70 வயதுடையவர் என்றும், சம்பவ இடத்தைப் பார்வையிட்ட GRP இன் புலனாய்வு அதிகாரி ஒருவர், அவர் ரயில் பாதையை அத்துமீறிச் சென்றபோது அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிழந்தார் என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, செகந்திராபாத் ஆர்.பி.எஸ்ஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த நபரை அடையாளம் காண்பது உள்ளிட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
రైలు ఢీకొని వృద్ధుడు మృతి.. 5 కిలోమీటర్లు మృతదేహాన్ని లాక్కొచ్చిన రైలు
బీబీనగర్ – ఘట్ కేసర్ రైల్వే స్టేషన్ల మధ్య ఓ వృద్ధుడుని పట్టాలు దాటుతుండగా వరంగల్-సికింద్రాబాద్ ప్యాసింజర్ రైలు ఢీకొట్టింది.
ప్రమాదంలో వృద్ధుడి మృతదేహం రైలు ఇంజిన్కు చిక్కుకోగా అలాగే 5 కిలోమీటర్లు… pic.twitter.com/vRp1lz73b9
— Telugu Scribe (@TeluguScribe) July 3, 2024