பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்.! வேட்பாளர்களாக களமிறங்கிய 8 தமிழர்கள்.!

UK Election Candidate - Uma Kumaran - Mayuran Senthilnathan - Devina Paul

 இங்கிலாந்து: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள மொத்தம் 650 தொகுதிகளும் ஒரே கட்டமாக நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக தற்போதைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் வேட்பாளராகவும், தொழிலாளர் கட்சி சார்பாக கீர் ஸ்டார்மர் பிரதமர் வேட்பாளராகவும் களமிறங்கி உள்ளனர்.  இதில் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

அதே போல, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் பிரிட்டன் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.

பிரிட்டனில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு துவங்கும் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இரவு 10 மணிக்கு நிறைவு பெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையிலேயே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்