நாய் கூட பி.ஏ பட்டம் பெறுகிறது.! திமுக நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு.!

DMK executive RS Bharathi

சென்னை: நான் படிக்கும் போது ஊருக்கு ஒரு பி.ஏ. ஆனால், இப்போது நாய் கூட பி.ஏ படிக்குது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். இந்த நீட் போராட்டத்தின் போது அவர் பேசிய சில கருத்துக்கள் தற்போது பேசுபொருளாக மாறிவிட்டது.

அவர் பேசுகையில், கம்யூனில் ஜீவோ எனும் அரசு உத்தரவு மூலமாக தான் இங்கு நம்மில் பல பேர் டாக்டர்கள், வக்கீல்கள் என பல்வேறு பட்டங்கள் பெற்றோம் அதனை மறந்துவிட கூடாது. ஏதோ குலப்பெருமையால், கோத்திர பெருமையால் யாரு பட்டம் பெறவில்லை. ஆனால் இங்கு அதனை பலர் மறந்துவிட்டனர். இது திரவிட இயக்கங்கள் போட்ட பிச்சை. நான் வெளிப்படையாக பேசுகிறேன். நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய தைரியம் உள்ளவன் நான்.

நான் பி.ஏ பட்டம் பெற்றவுடனே ஒரு பெயிண்டர் ஆள்கிட்ட கொடுத்து ” ஆர்.எஸ்.பாரதி பி.ஏ” என பேர் எழுதினேன். அப்போதெல்லாம் ஊருக்கு ஒரே ஒரு பி.ஏதான் இருப்பார்கள். இப்போது, நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. இப்பொழுது யார் வீட்டிலாவது பி.இ (B.E), பி.ஏ (B.A) என போர்டு தொங்குகிறதா? யார் இந்த வளர்ச்சிக்கு காரணம்.? இந்த வளர்ச்சியை அழிக்க நினைப்பதற்கு தான் நீட் தேர்வு வந்திருக்கிறது என ஆவேசமாக பேசினார் திமுக அமைப்பு செயலலாளர் ஆர்.எஸ்.பாரதி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்