நடிகை ஷாலினி மருத்துவமனையில் அனுமதி! விமர்சனங்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி!
ஷாலினி : அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி மைனர் ஆப்ரேஷன் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மனைவி ஷாலினியை பார்க்க விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில், நேற்று நடிகர் அஜித்குமார்சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் வந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனையடுத்து, இன்று அஜித் மருத்துவமனைக்கு சென்று தன் மனைவியை நேரில் பார்த்து கவனித்து வந்துள்ளார். அஜித்தும், ஷாலினியும் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும், முன்னதாக, நடிகர் அஜித் தனது மனைவியை பார்க்க வரவில்லை அவர் படப்பிடிப்பில் இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியானது.
இதனால் அஜித் மீது எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த நிலையில், ஷாலினி தனது கணவர் அஜித் தன்னை கவனித்துக்கொள்வது போல ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பகிர்ந்துகொண்டு “என்றும் உன்னை காதலிப்பேன்” என்று அன்புடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அஜித் வரவில்லை என்பதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்ததற்கும் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
மேலும், மனைவி ஷாலினியை பார்க்க சென்னை வந்த அஜித் மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்று விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 % முடிந்திருக்கும் நிலையில், இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.