120 உயிர்கள் போன ஹத்ராஸ் சம்பவம்.. ‘போலா பாபா’ தலைமறைவு!
உத்தரப் பிரதேசம்: ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி, 161 பேர் உயிரிழக்க முக்கிய காரணம் என போலே பாபாவை பலரும் குறிப்பிடுகின்றனர். ஆம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மத போதகர் நாராயண் சாகர் விஷ்வ ஹரி எனும் ‘போலா பாபா’ தற்போது தலைமறைவாகியுள்ளார்
மேலும், இவ்விவகாரத்தில் தொடர்புடைய பலர் தலைமறைவாகி இருப்பதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்ற்னர். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி என 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கியதாகவும், ஆனால் கூட்டத்தில் 2.5 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் அவர்கள் மீதான எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் எடா மாவட்டத்தை சேர்ந்தவர் இவரது இயற்பெயர் நாராயண் சகார் ஹரி. கல்வியை முடித்த கையோடு பாபா உளவுத்துறையில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இவர் மீது பல குற்ற வழக்குகளும் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
உ.பியின் பல பகுதிகளில் அதிக செல்வாக்கு மிக்க மத போதகராக வலம்வந்து போலா பாபா, அம்மாநிலத்தின் காவல்துறையில் காவலராக பணியாற்றி 1990-ல் விடுப்பு ஓய்வு பெற்றபின், சாமியாராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.