இந்தியன் 2 படத்துடன் மோத தயாரான பார்த்திபன்! தலைக்கு தில்ல பாத்தீங்களா…

இந்தியன் 2 : ஜூலை 12-ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் மீது இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் இந்த படம் கண்டிப்பாக வசூலில் முதல் நாளில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இவ்வளவு பெரிய படத்துடன் வேறு படங்கள் அதே தினத்தில் வெளியானது என்றால் நிச்சியமாக எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாக வரவேற்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.
வசூல் சரியாக கிடைக்காது என்பதன் காரணமாகவே பெரிய படங்களுடன் படத்தை இறக்க பலரும் யோசிப்பது உண்டு. ஆனால், பார்த்திபன் அதனை பற்றி எல்லாம் யோசிக்காமல் தான் அடுத்ததாக இயக்கி நடித்துள்ள ‘டின்ஸ்’ திரைப்படத்தினை இந்தியன் 2-வுடன் இறக்க முடிவெடுத்துள்ளார். ‘டின்ஸ்’ திரைப்படமும் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.