அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்.? சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.!
அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதலைமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைது செய்து இருந்தது. மேலும், இதனை தொடர்ந்து சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதனால், இன்றைய நாளில் இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை தொடர்ந்து இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அதில் மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ என்னை கைது செய்து சிறையில் அடைத்தது எல்லாமே சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.
இதானல், சிபிஐ அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அதன்பின் தொடர்ந்து இந்த வழக்கை தீர விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் கெஜ்ரிவால் மனு குறித்து 7 நாளில் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து இது தொடர்பான விசாரணையை வரும் ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். ஏற்கனவே ஜூலை- 3 வரை நீதிமன்ற காவலில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் இருந்து கடந்த ஜூன் 23 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.