உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மசாலா டீ செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம்..
Masala Tea-மணக்க மணக்க மசாலா டீ தயார் செய்வது எப்படி .. வாங்க தெரிஞ்சுக்கலாம்..
தேவையான பொருட்கள்;
- சோம்பு =2 ஸ்பூன்
- பட்டை= பத்து கிராம்
- மிளகு= 10 கிராம்
- சாதிக்காய்= 2 பீஸ்
- கிராம்பு =5 கிராம்
- சுக்கு= இரண்டு துண்டு
- ஏலக்காய்= 10-15 கிராம்
செய்முறை;
சோம்பு, பட்டை ,மிளகு ,ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை மிதமான சூட்டில் மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். சுக்கை இரண்டு மூன்றாக தட்டி சேர்த்து வறுக்கவும். மசாலா பொருட்கள் கருகி விடாமல் பார்த்து கவனமுடன் வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும். இப்போது ஆரியவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
டீ போடும் முறை;
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் டீ தூள் மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு டம்ளர் பாலையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா டீ பவுடரை அரை ஸ்பூன் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும் .டீயில் ஆடை வரும் வரை கொதிக்க வைத்துக் கொள்ளவும் .அப்போது தான் சுவை அதிகமாக இருக்கும். இப்போது அந்த டீயை வடிகட்டினால் மசாலா டீ மணக்க மணக்க தயாராக இருக்கும்.