புல்லை சாப்பிட்டது இதுக்கு தான்! மனம் திறந்த கேப்டன் ரோஹித் சர்மா!

rohit sharma

உலகக்கோப்பை டி20 2024 : இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்று அசத்தியுள்ள நிலையில், இன்னும் வாழ்த்துக்கள் குறைந்தபாடு இல்லை. இந்தியா வெற்றிபெற்றதை இன்னுமே கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கோப்பையை வென்ற குஷியில் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்தும் வருகிறார்கள்.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்மா எமோஷனலான செயல்கள் பற்றிய காட்சிகளும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலானது. கோப்பையை வாங்கும்போதும், வெற்றிபெற்ற பிறகு தரையில் படுத்துக்கொண்டதும் ஹர்திக் பாண்டியாவிற்கு முத்தம் கொடுத்தது என பல விஷயங்களை செய்தற். அதிக குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் போட்டி முடிந்த பிறகு பிட்ச்சில் இருந்த புல்லை எடுத்து சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவிய நிலையில், ரோஹித் சர்மாவை பலரும் பாராட்டினார்கள்.

இதனையடுத்து, சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா புல்லை எடுத்து சாப்பிட்ட காரணம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” கோப்பை வென்றபிறகு எனக்கு கொஞ்சம் எமோஷனலாக இருந்தது என்பது அனைவர்க்கும் தெரியும். நாங்கள் விளையாடிய பார்படாஸ் பிட்ச்தான் எங்களுக்கு உலக கோப்பையை கொடுத்தது.

எங்களுக்கு கோப்பையை கொடுத்த அந்த மைதானத்தை வாழ்நாள் முழுவதும்  மறக்கமாட்டேன். இந்தியர்களின் கனவு நனவான இடத்தின் ஒரு பகுதி என்னுடன் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு அங்கிருந்த புல்லை சாப்பிட்டேன்.  அந்த மைதானத்தையும் நான் என்றென்றும் நினைவில் வைத்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்” எனவும் கேப்டன் ரோஹித் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்