வீரனாக நீர்வீழ்ச்சியில் குதித்த நபர்.. இறுதியில் மகள் கண் முன்னே நடந்த சோகம்.!
மகாராஷ்டிரா : புனேயில் ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர், தனது ஜிம்மில் இருந்து 32 பேர் கொண்ட குழுவுடன், கடந்த சனிக்கிழமையன்று மும்பைக்கு மிக அருகில் உள்ள தம்ஹினி காட்டில் உள்ள நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தார்.
அங்கு நீர்வீழ்ச்சியில் குதித்த ஸ்வப்னில் தாவ்டே, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் உடனடியாக தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் காணவில்லை. இதற்கு முன்னதாக, ஐந்து குடும்ப உறுப்பினர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
அந்த நபரின் 10 வயது மகள் தனது தந்தையின் செயல்களை கேளாமராவில் பதிவு செய்து கொண்டிருந்தது இறுதியில் சோகமாக மாறியது. அந்த வீடியோவில், தண்ணீர் கொட்டும் நீர்வீழ்ச்சியில் அந்த நபர் டைவ் செய்வதைக் காணலாம்.
Man jumps into an overflowing waterfall at Tamhini Ghat in #Maharashtra.#Pune #Lonavala #viral #Viralvideo #Pimprichinchwad pic.twitter.com/0ZswsLo5et
— Siraj Noorani (@sirajnoorani) July 1, 2024
அப்போது அவர் நீந்த முயற்சித்த போதிலும், அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இறுதியில் பாய்ந்தோடும் நீர் அவரை கீழ்நோக்கி இழுத்துச் செல்கிறது. லோனாவாலாவில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடித்துச் செல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.