இன்று சற்று கூடியது தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

gold price

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாளாக ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமில்லாமல் இருந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (02-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,520க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,690க்கும் விற்பனையாகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.95.50க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (01-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எந்தவித மாற்றம் இல்லாமல், சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.53,480க்கும், கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ரூ.6,685க்கும்  விற்பனையானது. அதே நேரம்,  வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ. 94.50க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 94, 500க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்