டிகிரி, டிப்ளமோ, முடிச்சிருக்கீங்களா? போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு..மிஸ் பண்ணாம விண்ணப்பிங்க!!
TNSTC ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) அப்ரண்டிஸ் வேலைக்கு ஆட்கள் தேவை என காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்ப தாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலியிடங்கள் விவரம்
பட்டதாரி அப்ரண்டிஸ்
|
85 |
டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் | 303 |
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ் | 300 |
மொத்தம் காலியிடங்கள் எண்ணிக்கை | 688 |
கல்வித்தகுதி
- பட்டதாரி அப்ரண்டிஸ்: வேலைக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் பட்டம் (இன்ஜினியர்) பெற்றிருக்க வேண்டும்.
- டெக்னீசியன் அப்ரண்டிஸ்: வேலைக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ (Engg) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பொறியியல் அல்லாத பட்டதாரி : வேலைக்கு விண்ணப்பதாரர்கள் கலை/ அறிவியல்/ வணிகம்/ மனிதநேயம் போன்ற BA/ B.Sc/ B.Com/ BBA/ BCA போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
- பட்டதாரி பயிற்சியாளர்களுக்கு ரூ.9000/- மற்றும் டிப்ளமோ (தொழில்நுட்ப வல்லுநர்) ரூ.8000/-
பயிற்சி பெற்றவர்கள் - பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கான பயிற்சி இடங்கள் (மாதாந்திர உதவித்தொகை: பட்டதாரி பயிற்சியாளர்களுக்கு ரூ.9000/-) சம்பளமாக வழங்கப்படும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 14-06-2024 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 08-07-2024 |
தகுதி உள்ளவர்களை அறிவிக்கும் தேதி | 12-07-2024 |
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி | ஜூலை 22 முதல் 24 வரை |
விண்ணப்பிக்கும் முறை
இந்த வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்ப தாரர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணையதளமான https://nats.education.gov.in/ இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். கடைசி தேதி ஜூலை 8 என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பித்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.