சிறு வியாபாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி ‘இந்த’ சான்றிதழ் தேவையில்லை.!

Building Construction

சென்னை: சிறு வணிகர்கள் கட்டட முடிவுச் சான்றிதழ் பெற தேவையில்லை என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019இன் படி அனைத்து வகையான வணிக பயன்பாட்டு கட்டடங்களும் கட்டட முடிவு சான்றிதழ் கட்டாயமாக பெறப்பட வேண்டும் என்ற சட்ட விதி தமிழகத்தில் உள்ளது. இதனை பெரு வணிகர்கள் மட்டுமல்ல சிறு வணிகர்களும் தங்கள் வணிக கட்டடங்களுக்கு கட்டட முடிவு சான்றிதழ் பெற வேண்டும். அதன் பின்னர் தான் தங்கள் தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இந்த விதிமுறையால் சிறு வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானதாகவும், இந்த விதியை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. இதனை தொடர்ந்து சிறு வணிகர்களின் நலன் கருதி, தமிழக சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜூன் 21ஆம் தேதி அன்று தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி ஓர் சட்டதிருத்தத்தை கொண்டுவந்தார்.

அதன்படி, சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் 300 சதுர மீட்டர் மொத்த கட்டட பரப்பளவில். 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் சிறு வணிகக் கட்டடங்களுக்கு, கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என அறிவித்தார். அதன் பின்னர் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk