இன்று முதல் அமலாகும் 3 குற்றவியல் சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?
![3 Criminal Laws](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/07/3-Criminal-Laws-1000x600.webp)
டெல்லி: கடந்த பாஜக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்ட முக்கிய சட்ட மசோதா இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய சட்டதிருத்தங்கள், ஆங்கிலேயர் காலத்து சட்டத்திருத்தங்களான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் ஆகிய சட்டங்கள் பெயர் மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் மீது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் 2023 என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அந்த சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பூஜ்ஜிய எப்ஐஆர் என்பதை கருத்தில் கொண்டு ஆன்லைன் வாயிலாக போலீஸ் புகார்களை பதிவு செய்ய கோருதல். குற்ற காட்சிகளில் கட்டமாக வீடியோகிராபி எடுக்க வேண்டும். எலக்ட்ரானிக் முறையில் சம்மன்கள் அனுப்ப கோருதல். பாதிக்கப்பட்டவர்களுக்கு FIRஇன் நகலை கொடுக்க வழிவகை செய்யப்படுகிறது.
ஒரு நபர் குற்றபுகார் குறித்து கைது செய்யப்பட்டால், தான் கைது செய்யப்பட்ட நபரை ஒருவருக்கு தகவலாக தெரிவிக்க உரிமை உள்ளது. அப்போது, எந்த காவல்நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளோம், கைது செய்யப்பட்ட விவரம் ஆகியவற்றை குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் தெரிவிக்கலாம்.
குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடத்தில் தடயங்களை சேகரிக்க தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு செல்லுகையில், கண்டிப்பாக வீடியோகிராபி எடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் ஆதாரங்கள் தவறுவதை தடுக்க முடியும் என சட்டத்திருத்தம் கூறுகிறது.
புதிய சட்டத்திருத்தத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன, அதன் முதற்கட்ட விசாரணையை விரைவாக முடித்து அதன் அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு 90 நாட்களுக்கும் தங்கள் வழக்கின் முன்னேற்றம் குறித்த தன்மை அறிய அவர்களுக்கு உரிமை உண்டு.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.
பெண்களுக்கு எதிரான குறிப்பிட்ட வகையிலான குற்றங்களுக்கு, ஒரு பெண் நீதிபதி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு கிடைக்கபெறவில்லை என்றால், ஒரு ஆண் நீதிபதி ஒரு பெண்ணின் முன்னிலையில் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும், விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும்.
14 நாட்களுக்குள் FIR, போலீஸ் அறிக்கை, குற்றப்பத்திரிகை , அறிக்கைகள், வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களை குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் என இருவருக்கும் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு . விசாரணைகளில் தேவையற்ற தாமதங்களைத் தடுக்கவும், சரியான நேரத்தில் நீதியை உறுதிப்படுத்தவும் அதிகபட்சம் இரண்டு ஒத்திவைப்புகளை மட்டுமே நீதிமன்றங்கள் அனுமதிக்கும் என புதிய குற்றவியல் சட்டங்களின் மீதான திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024![Director Vetrimaran - Vijay sethupathi from Viduthalai 2 movie](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Director-Vetrimaran-Vijay-sethupathi-from-Viduthalai-2-movie.webp)
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/kothandaraman-actor.webp)
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024![arudra darisanam (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/arudra-darisanam-1.webp)