பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க..! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..
IBPS CLERKS : இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் (ஐபிபிஎஸ்) எழுத்தர் (Clerk) பரிவில், மொத்தம் 6128 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்.
அதில், தமிழகத்தில் மட்டும் 665 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இதற்கு தகுதி உள்ளவர்கள் இன்று (ஜூலை 1) முதல் விண்ணப்பிக்கலாம், ஜூலை 21ம் தேதிக்குள் http://ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் ஐபிபிஎஸ் நிர்ணயித்த தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, SC/ST மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்காக உதவும் விதமாக, இத்தேர்வுக்கான பயிற்சி ஆகஸ்ட் 12 முதல் 17ம் தேதி வரை வழங்கப்படும்.
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(அல்லது) வேறு ஏதேனும் உயர்கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது, அதேபோல் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC, ST, PwBD, ESM, DESM பிரிவினருக்கு – ரூ.175 எனவும், மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் – ரூ.850 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்
பரோடா வங்கி, இந்தியா வங்கி, மகாராஷ்டிரா வங்கி, கனரா வங்கி, மத்திய இந்தியா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிண்ட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் இந்தியா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.