கோலியை தொடர்ந்து ‘ரோஹித் ஷர்மா’வும் டி20யிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்!

Rohit Sharma

ரோஹித் சர்மா: இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை தட்டி தூக்கினார்கள்.

இந்நிலையில், நேற்று போட்டி முடிந்தவுடன் இந்தியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். அவரைத் தொடர்ந்து இன்னோரு ஜாம்பவானான இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தனது ஓய்வை அங்கு அறிவித்துள்ளார்.

Virat Kohli - Rohit Sharma [file image]
Virat Kohli – Rohit Sharma [file image]
இந்திய அணியின் 2 முக்கிய நட்சத்திர வீரர்கள் இப்படி ஒரே தருணத்தில் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் நேற்று அவர்கள் இருவரும் தேசிய கொடியுடன், கையில் உலக கோப்பை உடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருவருக்கும் நன்றி கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்