மீட்புப்பணி வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அமித்ஷா அசத்தல் அறிவிப்பு.!

Union Minister Amit shah

டெல்லி: தேசிய மீட்புப்படை வீரர்களின் 2வது மலையேற்ற விஜய நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது கூறுகையில், தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) பணியார்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தியை கூறுகிறேன். அவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து இருந்த உதவித்தொகையை உயர்த்த ஒப்புதல் கிடைத்துள்ளது.

மீட்புப்பணிகளில் ஈடுபடும் வீரர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையானது 40 சதவீதம் வரை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இது மகிழ்ச்சியான விஷயம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

மேலும், எங்கள் CAPF (மத்திய ஆயுதப்படையினர்) வீரர்கள் இனி அனைத்து தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்கான வழிமுறைகள் கண்டறிந்து அதை முன்னெடுத்துச் செல்வோம். என மத்திய அமைச்சர் அமித்ஷா இன்றைய விழாவில் குறிப்பிட்டு பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்