குஜராத் கனமழை : இடிந்து விழுந்த ராஜ்கோட் விமான நிலைய மேற்கூரை!
குஜராத் : கடந்த சில நாட்களாகவே டெல்லி, மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக குஜராத்தின் ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் இருந்த மேற்கூரை திடீரென கீழே இடிந்து விழுந்தது.
ஏற்கனவே. கனமழை காரணமாக ,டெல்லி, ஜபல்பூர் விமான நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இன்று ராஜ்கோட் விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விழுந்து சேதம் அடைந்தது. குறிப்பாக, சொல்லவேண்டும் என்றால், நேற்று டெல்லியில் பெய்த கனமழையின் போது சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-1 மேற்கூரை இடிந்து விழுந்து கீழே இருந்த ஒருவர் பலியானார். இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அடுத்ததாக குஜராத்தின் ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் திடீரென மேற்க்கூரை இடிந்து விழுந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
VIDEO | Canopy collapses at the passenger pickup and drop area outside #Rajkot airport terminal amid heavy rains.
(Source: Third Party) pic.twitter.com/gsurfX2O1S
— Press Trust of India (@PTI_News) June 29, 2024
சம்பவம் ஏற்பட்டதை தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மேற்க்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். மேலும், குஜராத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெற்கு குஜராத்திற்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.