,
kalki 2898 ad

இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது! கல்கி படத்தை புகழ்ந்த ரஜினிகாந்த்!

By

கல்கி 2898 AD : இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக  எடுக்கப்பட்டு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “கல்கி 2898 AD”. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன்,  திஷா பதானி, சாஸ்வதா சாட்டர்ஜி, பிரம்மானந்தம், மாண்டவ சாய் குமார், பசுபதி, மாளவிகா நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 190 கோடி வரை வசூல் செய்து இருந்தது.

இந்நிலையில், கல்கி படத்தை பார்த்துவிட்டு மக்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு சினிமா பிரபலங்களும் விமர்சனங்களை தெரிவித்துவிட்டு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு தனது எக்ஸ்வலைத்தள பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

படம் பார்த்துவிட்டு அவர் கூறியிருப்பதாவது ” கல்கி படம் பார்த்தேன். ஆஹா! என்ன ஒரு காவியம்! இயக்குனர் நாக் அஸ்வின் இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார். அஸ்வினிதத், அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகாபடுகோன் மற்றும் #Kalki2898AD குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாவது பாகத்திற்கு காத்திருக்கிறேன்” என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Dinasuvadu Media @2023