ரத்த கரையுடன் ஜவான் லுக்கில் ரீல்ஸ்…6 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்!!
உத்தரப் பிரதேசம் : இன்றயை காலகட்டத்தில் ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாகிவிட்டது. பலரும், ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு தேவையில்லாத சில விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காவல்துறையிடம் சிக்கி கைதாகியும் வருகிறார்கள். அப்படி தான் உத்திரபிரதேசத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் இருந்து திபாயில் ஜவான் படத்திலிருந்து ஷாருக்கானின் பேண்டேஜ் தோற்றத்தை காப்பி அடித்து 6 யூடியூபர்கள் சாலையில் கையில் இரும்பு கம்பிகளுடன் சட்டை கூட போடாமல் நடந்து செய்து ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். இதனை பார்த்த பலரும் என்ன தலை முழுவதும் பேண்டேஜ் மற்றும் ரத்தக்கறையாக இருக்கிறது என அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.
ஒரு சிலர் இது ஜவான் படத்தில் ஷாருக்கான் போட்ட கெட்டப்பை வைத்து போட்டு இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அப்படியே பார்த்து கொண்டு சென்றார்கள். ஒரு சிலர் என்னவென்றே புரியாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு பார்த்தார்கள். வீடியோ வெளியாகி வைரலாக பரவிய நிலையில், 6 யூடியூபர்ளுக்கு லைக்குகள் கிடைத்தது உண்மை தான். ஆனால்,அதே சமயத்தில் காவல்த்துறை அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தனர்.
வீடியோ வைரலான நிலையில், அதனை வைத்து யாரெல்லாம் ரிலீஸ் செய்தார்கள் என்பதை விசாரணை செய்து பயங்கரத்தை பரப்பியதாக 6 யூடியூபர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரீல்ஸ் மோகம் ரொம்ப அதிகமாகிவிட்டது எனவும், சினிமாவை தாண்டி ஷாருக் கான் சார் மிகவும் நல்ல மனிதர் அவர் பெயரை கெடுக்க வேண்டாம் நண்பர்களே எனவும் கூறி வருகிறார்கள்.
फिल्म ‘जवान’ वाला शाहरुख खान बनने के चक्कर में 6 यूट्यूबर गिरफ्तार
शिवकुमार, रोबिन, कुशल, अंकुश मीणा, अमन और सचिन मीणा
यूपी के बुलंदशहर जिले में ये यूट्यूबर्स मुंह पर खून जैसे रंग से सनी लाल पट्टी बांधकर पैदल घूम रहे थे। बाइक पर घूम रहे थे। दहशत फैला रहे थे।
रिपोर्ट :… pic.twitter.com/wZnl6RQTJi
— Sachin Gupta (@SachinGuptaUP) June 27, 2024