தித்திப்பான சுவையுடன் பலாப்பழ போண்டா செய்யலாமா?
Jack fruit bonda-பலாப்பழத்தை வைத்து போண்டா செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
தேவையான பொருள்கள்;
- மைதா = 250 கிராம்
- பலாப்பழம்= 250 கிராம்
- நாட்டு சக்கரை =ஆறு ஸ்பூன்
- ஏலக்காய் =அரை ஸ்பூன்
- உப்பு சிறிதளவு
- எண்ணெய் = தேவையான அளவு.
செய்முறை;
மைதாவை சிறிதளவு உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது பலாப்பழத்தை கொட்டை நீக்கி நறுக்கி அதை மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும் .அதனுடன் நாட்டு சக்கரை அல்லது சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது அந்த விழுதை மைதாவுடன் சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்,
தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. போண்டா செய்யும் அளவிற்கு சற்று இளக்கமாக மாவை பிசைந்து கொள்ளவும். இப்போது அந்த மாவை ஒரு மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். பிறகு பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து விட்டு மாவை சிறிது சிறிதாக எடுத்து போட்டு எடுத்தால் தித்திப்பான பலாவின் சுவையில் மிருதுவான போண்டா தயாராகிவிடும்.