சைக்கிளில் சென்ற நபர்! பேருந்து மோதி நசுங்கி உயிரிழந்த சோகம்..அதிர்ச்சி வீடியோ!

லக்னோ : லக்னோவின் வசீர்கஞ்ச் பகுதியில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது பின்னால் வந்த பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் திடுக்கிடும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி தற்போது இணையத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.
விபத்து நடந்த பிறகு, பேருந்து ஒரு கணம் மெதுவாகச் சென்றது, ஆனால் பாதிக்கப்பட்டவரைச் சரிபார்க்க டிரைவர் நிறுத்தாமல், அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றார், விபத்து வசீர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நகர முதியோர் இல்லத்திற்கு அருகில் நடந்தது தெரியவந்துள்ளது.
விபத்து நடந்ததை தொடர்ந்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல்களின்படி, லக்னோவின் பூர்வா மாயாநகர் நிரலாநகரில் வசிக்கும் ஜாஹித் ஹுசைன், புதன்கிழமை காலை, தனது மகன் (விபத்தில் உயிரிழந்தவர்) ரிஸ்வான் சில தனிப்பட்ட வேலைகளுக்காக சைக்கிளில் செல்வதாக வஜிர்கஞ்ச் காவல் நிலையத்திற்குத் அவருடைய தந்தை தகவலை தெரிவித்தார்.
தந்தை அளித்த புகாரின் பேரில் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவம் மிகவும் வருத்தமாக இருக்கிறது, அந்த பேருந்து ஓட்டுனரை கைது செய்ய வேண்டும்” என கூறி வருகிறார்கள்.
लखनऊ। वजीरगंज इलाके में साइकिल से जा रहे 40 वर्षीय रिज़वान को रोडवेज बस ने रौंद दिया।
लोगों ने शोर मचाया, लेकिन चालक बस लेकर भाग गया। pic.twitter.com/7yFMwNKrPP
— Mohammad Imran (@ImranTG1) June 27, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025