சிறகடிக்க ஆசை சீரியல்.. முத்துவின் உளறலால் மனம் உடைந்த அண்ணாமலை..!

sirakadikka asai 27

சிறகடிக்க ஆசை இன்று- விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய[ஜூன் 27] கதைக்களம் எப்படி இருக்கும் என இங்கே காணலாம்.

கதறி அழும் முத்து;

முத்து வீட்டுக்கு குடித்துவிட்டு வருகிறார் இதை பார்த்த மீனா நீங்க குடிச்சிட்டு தான் வருவீங்கன்னு எனக்கு தெரியும் அப்படின்னு சொல்றாங்க ..முத்து சொல்றாரு பாரேன் புருஷன் மனச எப்படி புரிஞ்சு வச்சிருக்க என் மீனு குட்டின்னு கொஞ்ச போறாரு இப்போ அண்ணாமலை இங்க வந்துட்டாரு .

இத பாத்த முத்து அப்பா சாப்டியா ன்னு கேக்குறாரு அண்ணாமலையும் நான் சாப்பிட்டேன் நீ சாப்பிட்டு வந்து இருப்ப போல அப்படின்னு கேக்குறாரு .அதுக்கு முத்து சொல்றாரு மன்னிச்சிரு பா மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அப்படின்னு சொல்லிட்டு இருக்கும்போது விஜயா என்ன இங்க சத்தம் அப்படின்னு கேக்குறாங்க.

என்ன இவன் குடிச்சிட்டு வந்து இருக்கிறானா மறுபடியும் ஆரம்பிச்சுட்டானா ..நாய் வாழ நிமிர்த்தவே முடியாதுன்னு சொல்றாங்க .இப்போ மனோஜ் வராரு என்னம்மா நானே டயர்டா வந்து தூங்குறேன் என் தூக்கத்தை கெடுக்குறீங்கன்னு சொல்லிட்டு முத்துவை பாக்குறாரு.

இப்போ முத்து சொல்றாரு வாடா பிஸ்கட் மேன் அப்படின்னு அது பிசினஸ்மேன் அப்படின்னு மனோஜ் சொல்றாரு .கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறவங்க எல்லாம் கட்டாந்தரையில   தான் தூங்குறாங்க நீ ஏசி ல உட்கார்ந்து பணம் வாங்கி போட்டுட்டு ஏசி ரூம்ல தூங்குற அப்படின்னு சொல்றாரு. உடனே ரோகினி மீனா உங்க ஹஸ்பண்ட கூட்டிட்டு போங்க தேவையில்லாம பேசுறாருன்னு சொல்றாங்க.

உண்மைகளை உளறிவிடும் முத்து ;

அதுக்கு மீனா உங்க வீட்டுக்காரர் தேவையில்லாம இவரோட பேச்சுக்கு வராரு அப்படின்னு சொல்லவும்  முத்து மீனா கிட்ட இது பாயிண்ட் அப்படின்னு சொல்றாரு. இப்போ ரவி கேட்கிறார் ஏன்டா இதெல்லாம் குடிச்சிட்டு தான் பேசணுமா. அதுக்கு முத்து, நீங்களும்தான்  என்ன விட்டுட்டு பீர் குடிச்சீங்க அப்படின்னு சொல்லிடுறாரு.

உடனே விஜயா டேய் அவன் என்னடா சொல்ற அப்படின்னு கேக்குறாங்க அதுக்கு ரவி இல்லமா அவன் உளறிட்டு இருக்கிறான் அப்படின்னு சொல்லிடுறாரு. இப்போ அண்ணாமலை கேக்குறாரு ஏன் முத்து இதெல்லாம் விட்டுட்டு தான இருந்த.. அதுக்கு முத்து சொல்றாரு மன்னிச்சிரு பா நீ கஷ்டப்பட்டு கட்டுன வீடு இப்போ அசிங்க படுத்துறாங்க அதை தாங்க முடியல என்னால அப்படின்னு சொல்றாரு.

விஜயா சொல்றாங்க இது என் அப்பா கட்டிய வீடு அப்படின்னு சொல்றாங்க. உங்க அப்பா கட்டின வீடு கீழ இருக்கு. இது என் அப்பா கட்டின வீடு அப்படின்னு ரொம்ப கவலைப்பட்டு அழுதுகிட்டே சொல்றாரு. அண்ணாமலைக்கிட்ட  கிட்ட முத்து கேக்குறாரு அப்பா என் காரை வித்தாவது நான் உனக்கு காசு தர்றேன் அப்ப நீ ரூம் கட்டுப்பா அப்படின்னு சொல்றாரு.

மீண்டும் அடிவாங்கும் மனோஜ் ;

இப்போ மனோஜ் சொல்றாரு அந்த கார் அவ்வளவு விலைக்கு எல்லாம் போகாது. உடனே முத்து மனோஜ அடிக்க போறாரு. நீ இந்த வீட்டை நான் ஆட்டை போட போறேன்னு சொன்னவன்தானே  அப்படின்னு அடிக்க போறாரு ரவி கிட்டயும் கேக்குறாரு நான் அப்படியாடா அப்படின்னு அதுக்கு ரவி இல்லடா அப்படின்னு சொல்றாரு.

நீயும் அவனும் தான் இந்த வீட்ல வாழ்ந்திருக்கீங்க என்ன சின்ன வயசுலே கொண்டு போய் பாட்டி வீட்டுல விட்டுட்டீங்க அங்கேயும் நான் கட்டில்ல தான் படுத்திருந்தேன். இங்கே என்ன கட்டின பாவத்துக்கு மீனாவும் ஹால்லையும் மாடிலையும் தூங்குறா. எனக்கு ரூம் வேணும்னா நான் எப்போதுமே நினைச்சதில்ல.

என் அப்பாவுக்காக மட்டும் தான் நான் இருக்கிறேன் அப்படின்னு ரொம்ப பீல் பண்ணி சொல்றாரு. அப்பா நீ இருக்கிற வரைக்கும் தான் நானும் மீனாவும் இங்க இருப்போம். அப்படின்னு சொல்லவும் அண்ணாமலை ரொம்ப நெகிழ்ந்து பார்க்கிறாரு. இப்போ விஜயா சொல்றாங்க அவனே குடிச்சிட்டு உளறிட்டு இருக்கிறான் எல்லாரும் போய் தூங்குங்க அப்படின்னு சொல்லிட்டு நீங்களும் வாங்க அப்படின்னு அண்ணாமலை கூப்பிட்டு போறாங்க .

அண்ணாமலையும் மீனா கிட்ட இவனை கூட்டிட்டு போம்மா போய் சாப்பிட சொல்லுன்னு சொல்லிட்டு அவரும் போயிரு. இப்போ விஜயா கிட்ட அண்ணாமலை சொல்றாரு பாத்தியா அவன் பேசுறத  நம்ம மேல எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் அப்படின்னு கேக்குறாரு. அவன் ஏதோ குடிச்சிட்டு உளறிகிட்டு  இருக்கிறான் .காலையில போத தெளியிற  மாதிரி அவன் அன்பும் தெளிஞ்சிடும் அப்படிங்கற மாதிரி நக்கலா சொல்றாங்க.

முத்துவை சமாதானப்படுத்தும் மீனா ;

இப்போ மீனா முத்துவுக்கு இட்லி வச்சு கொடுக்குறாங்க முத்து சாப்பிட்டுகிட்டே  மீனா கிட்ட புலம்பிட்டு இருக்காரு. மீனாவும் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து விடுகிறார். மறுநாள் காலையில பூஜை அறையில முத்து மணி அடிச்சு சத்தமா சாமி கும்பிட்டு இருக்காரு. எல்லாரும் அப்பதான் எந்திரிச்சு வராங்க யாருன்னு பார்த்தா முத்து எல்லாரும் அப்படியே ஷாக் ஆயிடறாங்க.

இப்ப முத்து தீபாராதனை காட்டுகிறார்கள் அண்ணாமலை கிட்ட தீபாராதனை கொண்டு போறாரு . டேய் நான் குளிக்கலடா அப்படின்னு சொல்றாரு அதுக்கு முத்து சொல்றாரு  மனசு சுத்தமா இருந்தா போதும்பா . இப்போ மனோஜ் தீபாராதனையே தொட போறாரு முத்து வேகமா எடுத்துட்டாரு நீ சுத்தமா இல்ல அப்படின்னு சொல்றாரு .

இப்ப தானடா அப்பாவுக்கு சொன்னே அப்படின்னு கேட்கவும் முத்து சொல்றாரு அது உனக்கு பொருந்தாது அப்படின்னு சொல்லிட்டு ரவி கிட்ட போறாரு  . இப்ப சுருதி சொல்றாங்க ஒரு நைட்ல இவ்ளோ சேஞ்சா அப்படின்னு கேக்குறாங்க. இதோட இன்னைக்கு  எபிசோட் முடிந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்