சமாஜ்வாடி எம்பி எழுப்பிய செங்கோல் சர்ச்சை.. அகிலேஷ் யாதவ் கூறுவதென்ன.?

Samajwadi Party Leader Akhilesh Yadav speech about Sengol Issue

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்ட போது மன்னர் ஆட்சி காலத்தில் அந்த அவையில் ஆட்சியின் அடையாளமாக நிறுவப்பட்டு இருக்கும் செங்கோல் ஆனது , புதிய நாடாளுமன்ற கட்டத்திலும் நிறுவப்பட்டது. இதனை பிரதமர் மோடி நிறுவினார். இந்த செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி எம்பி கடிதம் எழுதி உள்ளார்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சௌத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், மக்களவை சபாநாயகர் இருக்கையின் வலதுபுறம் செங்கோல் இருப்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இது ஜனநாயக ஆட்சி மன்னராட்சி நடைமுறை இங்கு இல்லை. செங்கோல் என்பது முடியாட்சியின் அடையாளம்.

நமது பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். அதில் செங்கோலை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்பின் பிரமாண்ட பிரதியை அதில் நிறுவலாம். என வலியுறுத்தி கடிதத்தை எழுதியுள்ளார் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சௌத்ரி.

இது பற்றி சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், பிரதமர் மோடி தலைவணங்கி செங்கோலை நிறுவி உள்ளதால் எங்கள் எம்பி அவ்வாறு சொல்லி இருப்பார். பிரதமர் பதவியேற்ற போது செங்கோலை வணங்க மறுத்துவிட்டார். அதனை ஞாபகப்படுத்த எங்கள் எம்பி இவ்வாறு கருத்து கூறியிருக்கலாம் என்றும், நாட்டை அரசியலமைப்பு சட்டம் மூலமே ஆள வேண்டும், செங்கோலை கொண்டு ஆட்சி செய்ய கூடாது என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

செங்கோல் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், செங்கோலை மக்களவையில் நிறுவி  மத்திய அரசு விளையாடி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்ட போது ஒரு நாடகத்தை பாஜக உருவாக்கியது. செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்பி கூறியது ஒரு நல்ல ஆலோசனை என்று அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்