‘அந்த மனசு தான் கடவுள்’! வெங்கல் ராவுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் சிம்பு!

சிம்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பல உதவிகளை செய்வது வழக்கம். சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்தால் அவர்களுக்கு பண உதவிகளை சிம்பு செய்து கொடுத்து வருகிறார். குறிப்பாக, மறைந்த நடிகர் தவசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட சிம்பு உதவி செய்தார்.
அதனை தொடர்ந்து, அடுத்ததாக பிரபல காமெடி நடிகரான வெங்கல் ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து சிம்பு உதவி செய்து இருக்கிறார். நகரம், கந்தசாமி, தலைநகரம், எலி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார் நடிகர் வெங்கல் ராவ்.
மாத்திரை வாங்குவதற்கு கூட பணம் இல்லை, மருத்துவமனைக்கு செல்ல கூட என்னிடம் பணமில்லை. ரொம்பவே கஷ்டபடுகிறேன்.எனவே எனக்கு உதவி செய்யுங்கள்” என உருக்கமாக பேசி உதவி கேட்டு இருந்தார். இதனை பார்த்த சிம்பு முதல் ஆளாக தன்னால் முடிந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை அவருடைய சிகிச்சைக்காக கொடுத்து உதவி செய்துள்ளார்.